வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார் பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார் சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார் ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே