வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன் பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே திருச்சிற்றம்பலம் திருவருள் விலாசப் பத்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்