வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த மாபாவி யேன்குறையை வகுத்து நாளும் என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய் இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே