பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும் ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் தேடற் கினிய சீர்அளிக்கும் சிவாய நம்என் றிடுநீறே