கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார் தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ