காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார் சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே