களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள்நீர் ததும்பித் துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே தெளித்தனன் செய்கைவே றறியேன் ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும் உரைப்பதென் அடிக்கடி உனக்கே