கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக் களிப்பொடு மணம்புரி விப்பாம் விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல் விரைந்துநன் மங்கலக் கோலம் நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர் நவிலும்அவ் வுலகவர் பிறரும் இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபை யவரே