ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர் மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகைசிறி தறியீர் காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க் கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே